உயிரிழந்த மகனுக்கு மெழுகுச்சிலை: பாசமிகு தந்தையின் நெகிழ வைத்த செயல்…!!

18 November 2020, 7:30 pm
mariganesh - updatenews360
Quick Share

மதுரை: உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனுக்கு 6 அடியில் மெழுகுச்சிலை அமைத்து தந்தை பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 2 மகள்களுக்கு பிறகு மூன்றாவதாக மகனாகப் பிறந்தவர் மாரிகணேஷ். வீட்டின் கடைக்குட்டியாக பிறந்த மாரிகணேஷ்-க்கு 10 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

பெற்றோர் மற்றும் சகோதரிகள் இருவரும் மாரிகணேஷ் மீது அதீத அன்பு செலுத்தி வளர்த்துள்ளனர். இளம் வயதில் புல்லட் பைக் ரேசராக இருந்த மாரி கணேஷ் பல போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்றுள்ளார். மேலும், பல விருதுகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாரி கணேஷ், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது தந்தை முருகேசன் சுமார் 6 லட்சம் ரூபாய் செலவில் மாரிகணேஷ்க்கு மெழுகு சிலை ஒன்றை உருவாக்கியுள்ளார். மாரிகணேஷ் மெழுகு சிலையை காணவும், முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தவும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனுக்கு ரூ.6 லட்சம் செலவில் மெழுகு சிலை அமைத்து, பாசத்தினை வெளிப்படுத்திய தந்தை முருகேசனின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.