ராங் Callஆல் ராங்கான போன தாய் மகள்!!தடம் மாறிய பெண்களால் தடுமாறிய தந்தை தற்கொலை!!

27 August 2020, 10:09 am
Tirpur Family Issue - Updatenews360
Quick Share

திருப்பூர் : ‘ராங் கால்’ மூலம் ராங்கான தாய் -மகளின் செயலால் தந்தை தற்கொலை செய்து கொண்டதால் யாரும் இல்லாத 15 வயது தெருவில் நிற்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் – பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. ஒர்க்‌ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி கனகவள்ளி. மகள் நிவேதா. மகன் குருபிரசாத். அழகு நிலையத்தில் பணி புரிந்ததாக கூறப்படும் கனகாவும், மகள் நிவேதிதாவும் டிக்டாக் ல் மூழ்கி கிடந்துள்ளனர்.

இந்நிலையில் டிக்டாக் மூலம் வந்த ராங்கால் பேசிய நபருடன் நிவேதாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதலை வளர்த்துள்ளனர். இதேபோன்று நிவதாவின் தாயார் கனகவள்ளிக்கும் ராங்கால் வந்துள்ளது. ராங்கால் பேசிய நபர்களிடம் கனகவள்ளியும், நிவேதாவும் காதல் வயப்பட்டு மணிகணக்கில் போன் பேசி வந்துள்ளதாக தெரிகிறது .

இதனை ரவி கண்டித்துள்ளார். இதனால் கனகவள்ளியும், நிவேதாவும் வீட்டை விட்டு மாயமாகினர். இதனை தொடர்ந்து ரவி, திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீசாரிடம் புகாரளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாய், மகள் இருவரையும் கண்டுபிடித்து ஒழுக்கமாக இருக்குமாறு அறிவிரை கூறி ரவியிடம் ஒப்படைத்தனர்.

இருப்பினும் காதலனை காண முடியாத ஏக்கத்தால் தாய், மகள் இருவரும் மீண்டும் மாயமாகினர். மாயமாகிய இருவரும் ஈரோட்டில் இருப்பதாக ரவிக்கு தகவல் கிடைக்க அவர் கடந்த திங்கட்கிழமை அங்கு சென்று கனகவள்ளியை திரும்ப தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்துள்ளார்.

கனகவள்ளி ரவியை தகாத வார்ததைகளால் பேசி அவமானப்படுத்தி அனுப்பியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய ரவி, செல்போனில் தனது மனைவி, மகளின் காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மனைவி, மகளை மீட்டு பத்திரபடுத்துமாறும் செல்போனில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

வீடியோவை ஆதாரமாக வைத்து சம்பந்தபட்டவர்கள் மீது விசாரணை நடத்த அனுப்பர்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தடம் மாறிய பெண்களால் குடும்பமே தடம் மாறியுள்ளது. செல்போனால் வாழ்க்கையே சீரழிந்து போனதால் குடும்பத் தலைவன் தற்கொலை செய்ய யாரும் இல்லா அநாதை போல தெருவில் நிற்கிறான் 15 வயது மகன்.

ஆபத்துகள் உள்ளது என்று தெரிந்தும், தேவையில்லாத சகவாசத்தால் ஒரு குடும்பமே நாசமாகியுள்ளது செல்போனில் மூழ்கி கிடப்பவர்கள் ஒரு எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கிறது.

Views: - 38

0

0