மனவளர்ச்சி குன்றிய மகளை மூச்சை பிடித்து கொன்ற தந்தை

17 October 2020, 9:57 pm
Quick Share

விருதுநகர்: இராஜபாளையத்தில் மனவளர்ச்சி குன்றிய ஆறு வயது பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் கூலித்தொழிலாளியான தந்தை மூச்சை பிடித்து கொலை செய்து விட்டு தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வரக்கூடியவர் பழனிக்குமார் ராமலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 6 வயதில் மகாலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தக் குழந்தை பிறந்த போது மன வளர்ச்சி குன்றிய நிலையில் பிறந்துள்ளது. தாயும் தந்தையும் கூலித்தொழிலாளி மில் வேலைக்கு செல்வதால் குழந்தையை பராமரிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர்

இந்த நிலையில் இன்று தாய் ராமலட்சுமி வேலைக்கு சென்ற நிலையில், தந்தை பழனி குமார்.மகள் மகாலட்சுமியை மூச்சைப் பிடித்து கொலை செய்துவிட்டு இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கூலித்தொழிலாளி ஆகிய இவர்கள் குழந்தையை வளர்க்க மிகவும் சிரமப்படுவதாகவும், மன வளர்ச்சி இல்லாத குழந்தையை பராமரிப்பதில் தங்களுக்கு மிக கஷ்டம் ஏற்பட்டுள்ளதால் கொலை செய்து இருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.