கோவை: உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற தனது மகளை பத்திரமாக மீட்டு வந்து கோவையில் மருத்துவ படிப்பை படிக்க வைக்க தமிழக முதலமைச்சர் உதவ வேண்டும் என்று கோவையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் மாணவியின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் வெடித்துள்ள சூழலில் அங்கு படிக்கவும், அலுவல் ரீதியாக சென்றவர்களும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உக்ரைனில் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் கோவை, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மருத்துவம் படிப்பதற்காக மாணவிகள் உக்ரைன் சென்றுள்ளனர். அதன்படி, கோவையில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருகிறார் கோவையை சேர்ந்த மாணவி அழகு லட்சுமி.
மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த அழகு லட்சுமியின் தந்தை கோவையில் உள்ள உணவகம் ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே தன்னார்வலர்களின் உதவி கிடைத்ததால் அழகு லட்சுமிக்கு உக்ரைனில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது உக்ரைனில் 3ம் ஆண்டு படித்து மாணவி, போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை சிவக்குமாரிடம் கேட்கச் சென்றோம். நிற்கவே நேரமில்லாது, உணவக வாசலில் மும்முரமாக தனது பணியை கவனித்து வந்தார். தனது இடைவிடாத பணிக்கு மத்தியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடும் சிரமத்திற்கு இடையில் எனது மகள் படிக்க சென்றுள்ளார். அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்திற்குள் கோவை வந்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இப்போது போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் எனது மகள் மீண்டும் அங்கு சென்று படிக்க முடியாது. எப்படியாவது எனது மகளை மீட்டு வந்து கோவையிலேயே அவர் மருத்துவம் படிக்க அரசு உதவி செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் எனது மக்களுக்கு உதவ வேண்டும் என்றார்.
வறுமையிலும் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த இந்த ஏழை தந்தையின் கோரிக்கைக்கு தமிழக அரசும் மத்திய அரசும் செவி சாய்க்கின்றனவா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
This website uses cookies.