தமிழகம்

ரஜினியை சுட்டுக் கொன்னுடுவானோனு பயம்.. நக்கீரன் கோபால் பகிர்ந்த ரகசியம்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ANUT மண்டபத்தில் எஸ்பிகே ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1973-74 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த பழைய மாணவர்கள் பொன்விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அன்றைய வருடம் பத்தாம் வகுப்பு படித்த நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற பழைய மாணவர்கள் தங்களது பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

நக்கீரன் கோபாலுடன் படித்தும் அவருடன் பழைய நட்பில் இருந்த நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சிரித்து மகிழ்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பழைய நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மேலும் சிறந்த இதழ் ஆசிரியருக்காக கலைஞரின் எழுதுகோல் விருது பெற்ற நக்கீரன் கோபால் அவர்களுக்கு அவருடன் படித்த சக நண்பர்கள் வீர வாழ் வழங்கி கௌரவித்தனர் மேலும் பரிசுப் பொருட்களும் வழங்கினர்.

50 வருடங்களுக்குப் பின் சந்தித்துக் கொண்ட பழைய மாணவர்கள் தங்கள் மனதில் இருந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் பேசி மகிழ்ந்து வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நக்கீரன் கோபால், திருவிழாவிற்கு செல்லும் குழந்தைகள் போல நான்கு நாட்களாக இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்து காத்துக் கொண்டே இருந்தேன். பழைய கால நினைவுகளை கொண்டு வரும் கூட்டமாக இதை பார்க்கிறோம். அந்த பழைய வாழ்க்கை தற்போது கிடைக்காதா என ஏங்குகிறோம். பல விருதுகள் வரும் போகும் ஆனால் இந்த நாள் வராது. இந்த நாள் மிகவும் அற்புதமான நாள்.

அருப்புக்கோட்டையில் வாழ்ந்த வாழ்க்கை அனைத்தும் மனதில் நிழலாடுகிறது. இந்த தொடர்பு ஜென்மத்துக்கும் நீடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என பேசினார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நக்கீரன் கோபால், நக்கீரன் கோபால் வருவதற்கு முன்னரே என்னுடைய பெயர் ராஜகோபால். எங்களுடன் படித்த பழைய மாணவர்கள் அனைவரையும் நெல்மணிகளைப் போல ஒன்றிணைத்து இந்த பொண்ணில் ஆண்டை சிறப்பாக கொண்டாடும் தினமாக நாங்கள் பார்க்கிறோம்.

பழைய நண்பர்கள் அனைவரும் பெரிய பெரிய பதவியில் அந்தஸ்த்தில் இருக்கிறார்கள் அனைத்தையும் மறந்து தற்போது ஒரே கோட்டில் இந்த விழாவை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நாள் ஒரு சுகமான போதை மிகவும் சந்தோசமாக இருக்கிறது இந்த நாள் என பேசினார்.

அப்போது நீங்கள் படிக்கும் போது என்ன ஆக வேண்டும் என நினைத்தீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் எதுவும் நினைக்கவில்லை நான் ஆரம்பத்தில் ஒரு ஆர்டிஸ்ட். என்னை கொக்கு என அழைப்பார்கள் கொக்கு பிள்ளை நீ எப்படி இப்படி ஆனா என கேட்பார்கள்.

பள்ளியில் ஆசிரியர் என்ன ஆக வேண்டும் எனக் கேட்டபோது நாம் ஐபிஎஸ் ஆக வேண்டும் என கூறினேன். ஆனால் பிகாம் படித்தேன் ‌ பிகாம் படித்தால் பேங்க் வேலை என கூறினார்கள் பிகாம் படித்தவனுக்கு எல்லாம் பேங்க் வேலை என கூறினால் தெருத்தெருவாக பேங்க் தான் வைக்க வேண்டும் அப்படி என்றால் பேங்க் வேலை இல்லை.

அரிசி கடை அதனை தொடர்ந்து சென்னைக்கு சென்று வேறு வழியில்லாமல் நக்கீரனாய் வாழ்கிறேன். அதையெல்லாம் விட எனக்கு பெரிதாய் கிடைத்தது கலைஞரின் எழுதுகோல் விருது. அதற்கும் மேலாக என்னுடைய நண்பர்களுடன் நான் இங்கு இருப்பது.

அருப்புக்கோட்டையில் சாப்பாடு தான் ஸ்பெஷல் ரத்த பொறியல் போடுவார்களா என நினைத்துக் கொண்டே வந்தேன் காலை ஈரல் ரத்த பொறிகளுடன் முட்டை தோசை மதியம் சீரக சம்பா பிரியாணி நண்பர்களுடன் இணைந்து சாப்பிடும் போது மிகப்பெரிய சந்தோசம் என பேசினார்.

வீரப்பனை சந்திக்க காட்டிற்கு சென்றிர்கள் அதேபோல எங்களையும் எங்காவது அழைத்துச் செல்லுங்கள் என உங்கள் நண்பர் கூறியதற்கு உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ரஜினி காட்டுக்கு என்னுடன் வர தயாராகி விட்டார் நானும் வருகிறேன் என்றார்.

அப்போது கலைஞர் எனக்கு போன் செய்தார் என்ன ரஜினி வருகிறாராமே என கேட்டார். ஏற்கனவே ஒரு சூப்பர் ஸ்டார் மாட்டிக்கிட்டார் இவரும் மாட்டிகிட்டால் என்னுடைய கதை கந்தல்தான்.

கலைஞரும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் யாரை கேட்டு அனுப்பினீர்கள் என்று நானும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் யாரை கேட்டு அழைத்துச் சென்றீர்கள் என்று. அப்போது அது நடந்து இருந்தால் நான் இங்கு பேட்டியே கொடுத்திருக்க முடியாது. இதை நீயே சமாளி என கலைஞர் என்னிடம் கூறினார்.‌

ரஜினி பேக்குடன் தயாராக இருந்தார். இமயமலைக்கு செல்வது போல ரெடியாகிவிட்டார். நான் ரஜினியை பார்த்து சிரித்தேன் என்ன கோபால் நல்லா இல்லையா எனக் கேட்டார் ஏங்க நான் அங்க போய் ரெடி பண்ணிட்டு உங்கள கூப்பிடுறேன் என டேக்கா கொடுத்து விட்டேன்.

காடு என்பது நாம் நினைத்தது போல் இருக்காது.வீரப்பனிடமிருந்து அழைப்பு இருக்க வேண்டும் அப்படி இல்லாமல் சிறிய சந்தேகம் இருந்தாலும் சுட்டுக்கொன்று விடுவான் என பேசினார்.

நீங்கள் அழைத்துச் செல்லாததால் ரஜினி ஏமாற்றம் அடைந்தாரா என செய்தியாளர்கள கேட்டதற்கு, ஏமாற்றம் அடையவில்லை அவர் புரிந்து கொண்டார் ராஜ்குமாரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது நான் சொல்லி புரிய வைத்து விட்டேன் என‌ பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.