முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்., 8 முதல் வகுப்புகள் தொடங்கும் : அண்ணா பல்கலை., அறிவிப்பு

4 February 2021, 1:30 pm
anna-university-updatenews360
Quick Share

சென்னை : இளநிலை மற்றும முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் வரும் பிப்.,8ம் தேதி முதுல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- பிஇ., பி.டெக், பி.ஆர்க், எம். ஆர்க் ஆகிய படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்., 8ம் தேதி வகுப்புகள் தொடங்கும். மார்ச் 15ம் தேதி முதல் 2ம் ஆண்டு மாணவர்களுக்கும், ஏப்.,5ம் தேதி 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கும்.

மாணவர்களின் விடுதிகளும் பிப்.,8 முதல் செயல்படும். இதேபோல, எம்இ, எம்.டெக், எம்பிஏ, எம்சிஏ, எம்.எஸ்சி ஆகிய படிப்புகளின் முதலமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளும் மார்ச் 8ம் தேதி முதுல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 26

0

0