பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு : இன்று மாலைக்குள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு!!

9 November 2020, 3:13 pm
School - Updatenews360
Quick Share

திருப்பூர் : நவம்பர் 11ம் தேதி பள்ளி திறப்பதாக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் ஒரு சுற்று காரணமாக கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது இதனிடையே தற்போது புறநானூற்றின் விகிதம் குறைந்து வருவதால் பள்ளி கல்லூரிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வரும் நவம்பர் 16ம் தேதி முதல் 9 10 11 மற்றும் 12ம் வகுப்புகளில் திறப்பதற்கு முடிவெடுத்துள்ளது இருப்பினும் பொதுமக்களிடையே பள்ளி திறப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது இதை அடுத்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் இன்று நடத்தப்பட்டது.

இதன்படி திருப்பூர் மாவட்டத்திலுள்ள 401 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த கருத்து கேட்பு கூட்டம் இன்று நடந்தது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 401 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

முன்னதாக கூட்டத்திற்கு வரும் பெற்றோர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது அவர்களுக்கு சனிடைசர் வழங்கப்பட்டது அதன்பின்னர் 9 10 11 மற்றும் 12ம் வகுப்புகளில் திறக்கலாமா வேண்டாமா என்பது குறித்த விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு அவர்களிடம் பூர்த்தி செய்தபின் திரும்ப பெறப்பட்டது.

இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் இன்று மாலைக்குள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார் இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது மாணவர்களின் மனநிலையை வெகுவாக பாதித்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு உடனடியாக அரசு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Views: - 55

0

0