அறிவியில் ஆசிரியர் அந்த மாதிரி ஆள் கிடையாது : பள்ளி மாணவி பாலியல் புகாரை எதிர்த்து சக ஆசிரியர்கள் திடீர் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2021, 11:23 am
Teachers Protest -Updatenews360
Quick Share

நாமக்கல் : அரசு மகளிர் பள்ளி அறிவியியல் ஆசிரியர் மீது 10 ஆம் வகுப்பு மாணவி பாலியல் புகார் கொடுத்த நிலையில் ஆசிரியருக்கு ஆதரவாக சக ஆசிரியர்களும், ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

நாமக்கல் நகரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் மதிவாணன் மீது அந்த பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னுடைய பெற்றோர்களுடன் சேர்ந்து அறிவியியல் ஆசிரியர் தவறாக நடக்க முயற்சிக்கிறார் என்று நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முயன்றதை கண்டித்து அப்பள்ளியில் உள்ள இதர ஆசிரியர், ஆசிரியைகளும் இதர ஆசிரியர் சங்கங்களும் அந்த அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இது பொய் புகார் என்றும் வேறு காரணங்களுக்காக இது மாதிரி புகார்களை சிலர் திட்டமிட்டு ஜோடிக்கிறார்கள் என கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு 8.30 மணி ஆன பிறகும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் உடனடியாக தலையிட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தொடர்ந்து போராடினர்.

பின்னர் போராட்டம் நடத்தியவர்களுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி இப்போது கலைந்து செல்லுங்கள் நாளை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க போராடி வந்த ஆசிரியர் ஆசிரியைகள் கலைந்து சென்றனர்.

Views: - 216

0

0