பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை : கோவையில் விமானப்படை அதிகாரி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2021, 11:41 am
Air Force officer Arrest -Updatenews360
Quick Share

கோவை : இந்திய விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் விடானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து பெண் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு கோவை விமான படை கல்லூரியில் (IAFC) பயிற்சியில் இருந்த லெப்டினல் அமிர்தேஷ் என்ற விமானபடை அதிகாரியை கோவை காவல் துறையினர் கைது செய்தனர்.

நேற்று இரவு படை அதிகாரி லெப்டினல் அமிர்தேஷ் , நீதிபதி இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார். விமான படை அதிகாரி மீது கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழகறிஞர் அபிடவிட் தாக்கல் செய்தார்.

கோவை காவல் துறை பதில் அபிடவிட் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில், விமானபடை அதிகாரி லெப்டினல் அமிர்தேஷை ஓரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்திரவிட்டார். இதனையடுத்து லெப்டினல் அமிர்தேஷை உடுமலை கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.

Views: - 166

0

0