கோவையில் விமானப்படை பெண் அதிகாரிக்கு பாலியல் வன்புணர்வு : விமானப்படை அதிகாரி கோர்ட்டில் ஆஜர்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 12:51 pm
Air Force Officer Arrest -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் பயிற்சி பெற வந்த விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில் விமானப்படை அதிகாரி சிறையில் அடைக்கப்பட்ட நிலையல் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

கோவை ரெட்பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு பயிற்சி பெறுவதற்காக டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் அதிகாரி ஒருவர் வந்தார்.

அங்கு அவருடன் 30-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் ஈடுபட்ட சூழலில், பெண் அதிகாரி தனியாக இருந்த போது அதே கல்லூரியில் பயிற்சி பெறும் மற்றொரு அதிகாரியான சத்தீஷ்கரை சேர்ந்த அமித்தேஷ் ஹர்முக் (வயது 30) என்பவர் அத்துமீறி நுழைந்து எண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அனைத்து மகளிர் மத்திய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விமானப்படை அதிகாரி அமித்தேஷ் ஹர்முக் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவரை 2 நாள் மட்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சூழலில், இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 167

0

0