பனியன் நிறுவன உரிமையாளருடன் பெண் ஊழியர் கள்ளக்காதல் : சேர்ந்து வாழ முடியாததால் இருவரும் தற்கொலை!!

2 July 2021, 1:40 pm
Suicide - Updatenews360-Recovered
Quick Share

திருப்பூர் : பெண் தொழிலாளியுடன் பனியன் நிறுவன உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் – நெருப்பெரிச்சல், ஜி.என்.பாலன் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார். திருமணமாகாத இவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருடைய பனியன் நிறுவனத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகை செல்வன் மனைவி நிரோஷா என்பவர் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஊரடங்கின் காரணமாக பனியன் நிறுவனம் செயல்படவில்லை.

இந்நிலையில் பிரேம்குமாரின் தாயார் வெளியே சென்றிருந்தார். திரும்ப வந்து கதவை தட்டி நீண்ட நேரமாகியும் திறக்காத காரணத்தால், அருகிலிருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, பிரேம்குமாரும், நிரோஷாவும் இறந்து கிடந்தனர்.

அவர்களின் அருகில் விஷ பாட்டில், செல்போன் ஆகியவை கிடந்தது. இதனை தொடர்ந்து சம்பவம் இடம் வந்த அனுப்பர்பாளையம் போலீசார் செல்போன் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 477

0

0