தேர்தல் பணியில் ஈடுபட்ட பறக்கும் படை பெண் காவலரிடம் சில்மிஷம் : உதகை வட்டாச்சியர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2022, 1:26 pm
Arrest - Updatenews360
Quick Share

உதகையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பறக்கும் படை பெண் காவலரிடம் சில்மிஷம் செயத துணை வட்டாச்சியரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட நீலகிரி மாவட்த்தில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் உகை அருகே உள்ள அதிகரட்டி பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை குழுவில் இருந்த பெண் காவலரிடம் துணை வட்டாட்சியர் பாபு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து பெண் காவலர் உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வட்டாட்சியர் பாபுவை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பெண் காவலரிடம் சில்மிஷம் செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டத்தின் கீழ் வட்டாச்சியரை கைது செய்து குன்னூர் சிறையில் அடைத்தனர்.

  • Madurai நான் என் ஹீரோவை பற்றி தான் பேசுவேன்… வில்லன்களை பற்றி பேசுவது என் வேலை இல்ல : சூடான சு.வெங்கடேசன் எம்பி!
  • Views: - 2240

    0

    0