பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் : முன்னாள் காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்!!

By: Udayachandran
15 September 2021, 1:31 pm
Woman IPS Abused Police Aajar -Updatenews360
Quick Share

விழுப்புரம் : பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் முன்னாள் எஸ்பி கண்ணன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் அப்போது தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்புக்கு சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகிய இருவர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் முன்னாள் எஸ்.பி.கண்ணன் இருவரும் ஆஜராகியிருந்தனர் .

இந்த வழக்கை நடத்துவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று ராஜேஸ்தாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்பத்திரிகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல் செங்கல்பட்டு மாவட்டம் வரை குற்றச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக வழக்கில் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த நீதிமன்றம் இந்த வழக்கை நடத்தக்கூடாது உளுந்தூர்பேட்டையில் தான் நடத்த வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதி நீங்கள் குறிப்பிட்டதை போல் உளுந்தூர்பேட்டைக்கும் தலைமை நீதிமன்றம் இந்த சி.பி.சி.ஐ.டி போலிசார் தான் என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று ஏற்கனவே அந்த பகுதி வழக்கை இந்த நீதிமன்றம் தான் நடத்தி தீர்ப்பளித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார்.

இந்நிலையில் இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கோபிநாத் வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்

Views: - 108

0

0