சென்னையில் போலீசாரிடம் அத்துமீறிய பெண் வழக்கறிஞர் விவகாரம் : நீதிபதி மீது புகாரளிக்க வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு!!!

19 June 2021, 7:56 pm
woman Lawyert - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சென்னையில் போலீஸாரிடம் அத்துமீறி நடந்த பெண் வழக்கறிஞர் தனுஜா விவகாரம் குறித்து சென்னை நீதிபதி பேசிய பேச்சுக்கள் குறித்து உச்சநீதிமன்றத்திலும் கொலிஜியம் புகார் அளிக்கப் போவதாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போக்குவரத்து சிக்னலில் பெண் வழக்கறிஞர் தனுஜா, போலீசாரிடம் அவமரியாதையாக நடந்ததாக தலைமை காவலர் ரஷீத் குமார் அளித்த புகாரின் பேரில் தனுஜாவும், ப்ரீத்தியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவரது மகளுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டது. தனுஜாவுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. இந்த பிரச்சனை குறித்து அகில இந்திய வழக்கறிஞர்கள்சங்க கூட்டமைப்பின் தலைவர் டி.கே. சத்தியசீலன் சக வழக்கறிஞர்களுடன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், வழக்கறிஞர் தனுஜா நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. மேலும் நீதிபதி தண்டபாணி வழக்கறிஞர்கள் குறித்து அவமரியாதையான சொல் ஒன்றை கூறியுள்ளதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிக்கும் கொலிஜியத்திற்கும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் தனுஜா மற்றும் போலீசார் பேசிய பேச்சுகள் முழு வீடியோ வெளியிடப்பட வேண்டும் என்றும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் புதன்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர் தெரிவித்தார்.

Views: - 346

1

0