திருமண உதவி திட்டத்திற்கு லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி : விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிரடி கைது!!
2 February 2021, 5:08 pmவிழுப்புரம் : திருமண உதவி திட்டத்திற்கு பரிந்துரை செய்ய ரூ.1500 லஞ்சம் வாங்கிய சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் இவரது மகள் திருமண உதவித் தொகைக்காக மனுவை பரிசீலனை செய்ய சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமி ரூபாய் 1500 லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதனையடுத்து ராமலிங்கம் தருவதாக கூறி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இடம் புகார் கொடுத்துள்ளார்.லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராமலிங்கம் இடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
இதன்படி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் ரூபாய் 1500 பணத்தை ராமலிங்கம் சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமிடம் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் கடந்த இருதினங்களில் மட்டுமே ரூபாய் 70 ஆயிரம் வாங்கி இருப்பாதவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
0
0