கொரோனா சிகிச்சையில் இருந்த பெண் தாசில்தார்…கரும்பூஞ்சை தொற்றால் உயிரிழந்த சோகம்: திருப்பூரில் அதிர்ச்சி..!!

21 July 2021, 1:23 pm
Quick Share

திருப்பூர்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் தாசில்தார் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்த பரிதாபம் அரங்கேறியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியை சேர்ந்தவர் கலாவதி. 53 வயதான இவர் ஊத்துக்குளியில் தாசில்தாராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவ விடுப்பில் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கலாவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 281

0

0