பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு : நாளை காலை முதல் முன்பதிவு தொடக்கம்!!

15 October 2020, 8:12 pm
train-updatenews360
Quick Share

சென்னை – நாகர்கோவில் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் ரயில், விமானப் போக்குவரத்து சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து, சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கும் வரும் வேளையில், பயணிகளின் வசதிக்காக பண்டிகை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் மாலை 6.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர் கோவிலில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் அதே ரயில், அடுத்த நாள் காலை 5 மணிக்கு சென்னை வந்தடையும். அக.,23 முதல் நவ.,16 வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

Views: - 0

0

0