ஷாப்பிங் போறீங்களா? உங்க வீட்ட பத்திரமா பாத்துக்கோங்க : காவல்துறை வெளியிட்ட ஆடியோ!!

10 November 2020, 9:19 pm
tirupur Police - Updatenews360
Quick Share

திருப்பூர் : தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வழிமுறைகளை வாட்ஸ் அப் வழியாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் ஆடியோ வைரல். திருப்பூர் போலீசார் புது முயற்சி.

திருப்பூரில் வெளி மாநில மற்றும் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் தங்கி பணி புரிகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர்.

இந்த நேரத்தில் பூட்டிய வீடுகளில் நிகழும் திருட்டு சம்பவங்களை தடுக்க, திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீசார், ஆடியோ பதிவு ஒன்றினை வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளனர்.

தற்பொழுது இந்த ஆடியோ அனைத்து வாட்ஸ் அப் குழுக்களிலும் பரவி வைரலாகி வருகிறது. திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீசாரின் இந்த புது முயற்சி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Views: - 25

0

0