சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.20’ கூட்டணியில் இணையும் பிரபல நடிகர்: இது வேற லெவல் Combo ஆச்சே…!!

Author: Rajesh
10 February 2022, 5:11 pm
Quick Share

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் தமிழ், தெலுங்கு இரு மொழிப் படத்தில் சத்யராஜும், பிரேம்ஜி அமரனும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Image

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் மிகப்பெரிய வசூலைப் பெற்றது. உலக அளவில் 100 கோடியை படம் தாண்டியதாக அறிவித்தனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் டான் திரைப்படம் வெளிவர உள்ளது.

Image

இது தவிர சயின்ஸ் பிக்சன் திரைப்படமான அயலானும் தயாராகி வருகிறது. அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார்.

Image

எஸ்கே 20 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படம் சிவகார்த்திகேயனின் முதல் நேரடி தெலுங்கு திரைப்படமாக இருக்கும். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் இதனை எடுக்கின்றனர். டூரிஸ்ட் கைடாக இருக்கும் ஒரு இளைஞன் வெளிநாட்டிலிருந்து வரும் பெண்ணிடம் காதல் கொள்வதே இந்தப் படத்தின் கதை என கூறப்படுகிறது. வெளிநாட்டிலும், புதுச்சேரியிலும் இதன் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சத்யராஜும், பிரேம்ஜியும் நடிப்பது உறுதியாகி உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்திரைப்படத்தில் சத்யராஜ் நடித்திருந்தார்.

இப்போது மீண்டும் அவர் இந்தப் படத்தில் இணைகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைப் போல இந்தப் படமும் ரொமான்டிக் காமெடியாக தயாராகிறது. 

Views: - 868

4

0