விதிகளை மீறி செயல்பட்ட நிதி நிறுவனங்கள் : சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி!!

13 May 2021, 1:19 pm
Seal - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் நகரப்பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட நிதி நிறுவனங்கள் உட்பட 6 கடைகளுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரப் பகுதிகளில் தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, மருத்துவம், பால் போன்ற பொருட்கள் உண்டான கடைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாராபுரம் நகரப்பகுதியில் 90 சதவீத வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஒரு சில நிதி நிறுவனங்கள் இயங்குவதாக தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு தாராபுரம் வருவாய் துறை அலுவலர்கள் சார்பில் தாராபுரம் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி செயல்பட்ட நிதி நிறுவனங்கள் உட்பட ஆறு கடைகளுக்கு தாராபுரம் வருவாய் துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அலுவலர் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆறு கடைகளுக்கு 50,000 வரை அபராதம் விதித்தனர்.

Views: - 80

0

0