ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ.22.28 லட்சம் அபராதம் வசூல்: திருப்பூர் மாநகராட்சி கெடுபிடி..!!

Author: Aarthi Sivakumar
22 August 2021, 4:15 pm
Quick Share

திருப்பூர்: ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக கடந்த ஆறு மாதத்தில் 22.28 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

திருப்பூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் குறித்து கண்காணிப்பதற்காக, மாநகராட்சி சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனுக்குடன் அபராதம் விதித்து மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த ஆறு மாதங்களில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஆயிரத்து 588 நிறுவனங்கள் மற்றும் 4,740 பேரிடமிருந்து சுமார் 22.28 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Views: - 379

0

0