தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத பிரபல துணிகடைகளுக்கு அபராதம்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

1 November 2020, 8:21 pm
Quick Share

கோவை: கோவையில் நோய்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத பிரபல துணிகடைகளுக்கு மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன் அபராதம் விதித்தார். மேலும் சில கடைகளுக்கு இரண்டு நாட்கள் கடை திறக்க தடை விதித்து உத்திரவிட்டார்.

தீபாவளி பண்டிகை காலம் காரணமாக கடைவீதி, ஜவுளி கடைகள், நகை கடை போன்றவற்றில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது கொரனா பரவல் காலத்தில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க கடைவீதிகளுக்கு படையெடுப்பதால் மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஊழியர்கள் எமதர்ம ராஜா வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். முன்னதாக கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்வில் கலந்துகொண்ட கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்தார்.

இதனை இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பேசுகையில், தமிழக அரசு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா தொற்று மாவட்டத்தில் குறைந்து நாள் ஒன்றிற்கு கொரனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கையும் குறைக்கபட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பண்டிகை காலம் காரணமாக அதிகமாக மக்கள் கடைவீதிகளுக்கு பொருட்கள் வாங்க வரும் நிலையில், அவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் எம்தர்ம ராஜா வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார். மேலும் அனைத்தி வணிகர்களையும் அழைத்து பேசி பண்டிகை காலத்தில் பின்பற்றி வேண்டிய கொரனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதிகமாக கூட்டமுள்ள கடைகளை கண்காணிக்க நான்கு மண்டலத்திலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கபட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும், தொடர்ந்து பின்பற்றாத நிறுவனங்களை தற்காலிகமாக மூடும் நடவடிக்கையும் எடுக்கப்படுமெனவும் எச்சரித்தார். இதனையடுத்து விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட ஆணையர் கூட்டம் அதிகமுள்ள கடைகளில் உள்ள வாடிக்கையாளர்களை வெளியேற்றவும் உத்தரவிட்டார். மேலும் நோய்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத பிரபல துணிகடைகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் அபராதம் விதித்தார். மேலும் சில கடைகளுக்கு இரண்டு நாட்கள் கடை திறக்க தடை விதித்து உத்திரவிட்டார்.

Views: - 18

0

0