மகளிர் விடுதியில் தீ விபத்து.. 2 பெண்களின் உயிரை குடித்த பிரிட்ஜ்.. ஷாக்கிங் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 செப்டம்பர் 2024, 10:38 காலை
Madurai Fire
Quick Share

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா பெண்கள் விடுதியில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பழைய பிரிட்ஜ் ஒன்று வெடித்துள்ளது.

இதன் காரணமாக விடுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில் மாணவிகள் அவசர அவசரமாக வெளியேறி உள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த மதுரை பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் கடந்த ஒரு மணி நேரமாக போராடி புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விடுதியில் தங்கியிருந்த மூன்று மாணவிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: கூட்டணியில் இருந்துட்டு… மதுவுக்கு எதிராக மாநாடா? திருமாவளவனை விளாசிய சீமான்!!

தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேர் உயிரிழந்தனர். பரிமளா, சரண்யா ஆகிய இருவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 168

    0

    0