கோவை மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து : 3 மணி நேரம் போராடிய தீயணைப்புத்துறை!!

29 January 2021, 10:54 am
Plastic Godown Fire - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையிலுள்ள வீட்டு உபயோக பிளாஸ்டிக் மொத்த வியாபார குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

கோவை மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலை எம்.ஆர்.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 38). கடந்த 20 வருடமாக பிளாஸ்டிக் குடோன் வைத்து பிளாஸ்டிக் மொத்த வியாபரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4.00 மணிக்கு குடோனிலிருந்து தீடீரென்று புகை வந்துள்ளது.சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் தீ பிடித்து எரிய தொடங்கியது,அருகில் அதிகமாக வீடுகள் உள்ளதால் உடனடியாக மேட்டுப்பாளையம் காவல்துறை தீயனைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர். மேலும் அருகில் குடியிருப்பு பகுதிகள் அதிக இருப்பதால் அங்கு ஒரு சில வீடுகளிலும் லோசாக தீ பிடித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைத்தனர்.

அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் தீயை முழுவதுமாக அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சிவகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Views: - 0

0

0