தனியார் உணவக சமையல் அறையில் தீ விபத்து.. கரும்புகை வெளியானதால் பதட்டம்..

4 March 2021, 9:51 am
Quick Share

கோவை : உக்கடம் அருகே தனியார் உணவக சமையல் அறையில் திடிரென தீப்பிடித்து எரிந்து, கரும்புகை வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை உக்கடம் காவல் நிலையம் அருகே சபைர் என்பருக்கு சொந்தமான உணவகம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை பணியாளர்கள் சமையல் பணிகளை துவங்கிய போது திடிரென சமையல் அறையில் இருந்து தீப்பிடித்து கரும்புகை வெளியானது.

இதையடுத்து உடனடியாக பணியாளர்கள் வெளியே வந்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் , பணியாளர்கள் உதவியோடு உள்ளே இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை வெளியே அகற்றினர்.இதையடுத்து சமையல் அறையில் பிடித்த தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Views: - 15

0

0