ஓடும் காரில் மளமளவென பரவிய தீ…நூலிழையில் உயிர்தப்பிய ஓட்டுநர்: ஈரோட்டில் பரபரப்பு..!!

Author: Aarthi Sivakumar
27 October 2021, 6:14 pm
Quick Share

ஈரோடு: ஓடும் கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்தவர் குமார் . இவர் திருப்பூர் மேட்டுப்பாளையம் பிஎன் ரோட்டில் உள்ள பனியன் நிறுவனத்தில் துணிகளை தைக்க ஆர்டர் கொடுத்து விட்டு காரில் நம்பியூருக்கு இன்று புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தார்.

திருப்பூர் கூத்தம்பாளையம் பிரிவு அருகே செல்லும் போது போது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த குமார் சாலையோரம் நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கி என்னவென சோதனை செய்துள்ளார்.

அப்போது, சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை அடுத்து அவர் காரிலிருந்து தப்பி சிறிது தொலைவில் வந்து நின்று தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். இதற்கிடையே காரில் சிலிண்டர் பொருத்தப்பட்டு இருந்ததால் பிற வாகன ஓட்டிகள் சிறுது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்த அறிவுறுத்தப்பட்டனர். தகவலை அடுத்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றிய தீயை அணைத்தனர்.

இருப்பினும் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. காரில் தீப்பிடித்தது எப்படி என்று தெரியவில்லை. இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் காரில் பொருத்தப்பட்டிருந்தது வீட்டு உபயோக சிலிண்டரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 137

0

0