பட்டாசு வெடிக்கத் தடை கோரிய வழக்கு : இடைக்கால உத்தரவு பிறப்பித்த பசுமை தீர்ப்பாயம்!!

5 November 2020, 12:10 pm
Crackers - Updatenews360
Quick Share

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தமிழகம் உட்பட 23 மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பது தொடர்பான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனை வெடிக்கத் தடை விதிக்க கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா: பதிலளிக்க 4 மாநிலங்களுக்கு தேசிய பசுமை  தீர்ப்பாயம் உத்தரவு.. | Can ban crackers fired on diwali National Green  Tribunal orders 4 states to ...

இந்த மனு குறித்து டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஏற்கனவே பட்டாசு விற்பனையை தடை செய்துள்ளன.

இந்த வழக்கு குறித்த விசாரணையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்தி அறிக்கையில் தமிழ்நாடு, ஆந்திரா, அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 23 மாநிலங்களில் உள்ள 122 நகரங்களில் காற்றி தரம் மோசமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து பசுமைத் தீர்ப்பாயம் இது குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த நிலையில், தமிழகம், ஆந்திரா, அஸ்ஸாம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட 18 மாநில தலைமைச் செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், ஒடிஷாவில் வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

காலையில் ஒரு மணி நேரம் இரவு ஒரு மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் – சுப்ரீம்  கோர்ட் | GNS News - Tamil

இந்த நிலையில், ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நடவடிக்கையே இந்த வருடம் பிறப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

Views: - 29

0

0