தந்தை மற்றும் 7 வயது மகனின் உயிரை பறித்த பட்டாசு : நாட்டு வெடி வெடித்து சிதறிய பதைபதைக்க வைத்த காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2021, 1:02 pm
Crackers Dead -Updatenews360
Quick Share

விழுப்புரம் : ஆரோவில் அருகே உள்ள கோட்டகுப்பம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு எடுத்துச் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் தந்தை மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியை சேர்ந்தவர் கலை நேசன். இவரது மகன் பிரதீப் வயது 7. இவர் அரியாங்குப்பம் பகுதியிலிருந்து நாட்டு பட்டாசுகளை வாங்கிக்கொண்டு புதுச்சேரியில் இருந்து கூனிமேடுக்கு தனது மகனுடன் தனது ஆக்சஸ் 125 என்ற இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது புதுச்சேரி தமிழக எல்லை பகுதியான கோட்டக்குப்பம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த நாட்டு பட்டாசுகள் வெடித்து சிதறி அதில் பயணித்த கணேசன் மற்றும் அவரது மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டதால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று எதிரே வந்த இருசக்கர வாகனமும் பட்டாசு வெடித்ததில் பலத்த சேதம் அடைந்தது. அதில் பயணித்த சலாவுதீன் மற்றும் கணேஷ் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் இரு மாநில எல்லையில் நடந்ததால் இரு மாநில போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனங்கள் மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்த பட்டாசுகள் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 551

0

0