வயலில் காவலுக்கு இருந்த போது துப்பாக்கிச்சூடு.. முதியவர் பலி.. வனத்துறை மீது உறவினர்கள் புகார்..!!
தேனி மாவட்டம் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஈஸ்வரன் மீது வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் குள்ளப்பா கவுண்டன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் உயிரிழந்ததாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்த நிலையில் வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது ஈஸ்வரன் பதிலுக்கு தாக்கியதாக வனத்துறை சார்பில் கூறப்படுகிறது.
கத்தியால் தாக்கவந்த ஈஸ்வரனை பாதுகாப்பு கருதி வனவர் திருமுகன் துப்பாக்கியால் சுட்டதில் பலியானதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரன் உடல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரன் உயிரிழப்பு குறித்து வனத்துறையினர், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவில் வயலில் காவலுக்கு சென்ற ஈஸ்வரனை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதாக உறவினர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனை அருகே குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.