காணொலியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு : அசத்திய கல்லூரி !!

10 September 2020, 2:03 pm
College First Year - updatenews360
Quick Share

கோவை : துடியலூர் அருகே வட்டமலைப்பாளையத்திலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்கவிழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் காணொலி மூலம் நடைப்பெற்றது .

இவ்விழாவில் கல்லூரியின் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார் . கல்லூரி முதல்வர் உமா மற்றும் துறை தலைவர்கள் குத்து விளக்கை ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லக்ஷ்மி நாராயணஸ்வாமி தலைமை தாங்கி பேசினார் . அவர் பேசும்போது, “மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொள்ளும் கல்வியின் மூலம் சவால்களை சந்திக்கவும் , அதனை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.” என்றார்.

Views: - 0

0

0