காழ்ப்புணர்ச்சியால் திமுக கபட நாடகம் ஆடி வருகிறது: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!!

24 October 2020, 4:31 pm
jayakumar- updatenews360
Quick Share

7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில், திமுக காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நாடகம் ஆடி வருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, பெண்களை போற்ற வேண்டுமே தவிர தூற்றக்கூடாது, திருமாவளவன் கூறியது கண்டிக்கத்தக்கது. சமுதாயத்தில் பெண்களின் பங்கு காலங்காலமாக இருந்து வருகிறது.

திருமாவளவன் புகாருக்கு முகாந்திரம் இருந்தால் காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அரசு பள்ளியில் படித்தவர் என்பதால் அரசு பள்ளி மாணவர்களின் கஷ்டம் முதலமைச்சருக்கு தெரியும். உள் ஒதுக்கீடு குறித்து திமுக பேசியதும் இல்லை, யோசனை கூறவும் இல்லை. அதிமுக அரசின் யோசனையில் வந்த சட்டம் இது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில், காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக நாடகம் ஆடி வருகிறது. அதிமுக அரசுக்கு நற்பெயர் வந்துவிடக்கூடாது என்ற காழ்புணர்வுடன் செயல்படுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Views: - 16

0

0