தமிழக மீனவர்கள் விடுவிக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை

Author: kavin kumar
14 October 2021, 8:31 pm
Quick Share

நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரையும், அவர்களது 2 விசைப்படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகை மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வித்துள்ளனர்.

நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 11,ஆம் தேதி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் சிவகுமார், சிவநேசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டை சாமந்தன்பேட்டை தரங்கம்பாடி சந்திரபாடி பெருமாள்பேட்டை மீனவர்கள் 23, பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள தமிழகம் மீனவர்கள் 23 பேருக்கும் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் நாகை மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது இரு விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு நாகை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 215

0

0