தேங்காய்பட்டிணம் துறைமுகத்தில் தொடரும் மீனவர்களின் பலி : மீனவர்கள் கறுப்பு கொடி ஏந்த மவுன ஊர்வலம்!!

18 July 2021, 3:21 pm
Fisherman Dead protest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்படும் தொடர் விபத்துகளால் உயிர் இழப்புகள் ஏற்படுவதை கண்டித்து மீனவர்கள் கைகளில் கறுப்பு கொடி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் நேற்று நடந்த படகு விபத்தில் இனையம்புத்தன்துறை பகுதியை சேர்ந்த 33 வயது மீனவர் ஒருவர் பலியானார்.

இதே போன்று கடந்த 6 மாதங்களில் மட்டும் 6 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் ஏற்பட காரணம் துறைமுக முகத்துவாரத்தில் குவிந்து கிடக்கும் மணல் மேடுகளே என மீனவர்கள் குற்றச்சாட்டி வரும் நிலையில் நேற்றும் மீனவர் ஒருவர் இறந்ததை கண்டித்து போராட்டம் நடத்த மீனவர்கள் அனுமதி கோரி இருந்த நிலையில் அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதனை தொடர்ந்து தூத்தூர் மண்டலத்தை சேர்நத மீனவர்கள் பலியான மீனவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கைகளில் கறுப்பு கொடி ஏந்தி இரையுமன்துறை பகுதியில் இருந்து துறைமுக முகத்துவாரம் வரை ஊர்வலமாக நடந்து சென்று அஞ்சலி செலுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்ந்து உயிர்பலி வாங்க துடிக்கும் மீன்பிடி துறைமுகத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பெருந்திரளாக மக்களை திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Views: - 127

0

0