கடலில் இறங்கி நடுக்குப்பம் மீனவர்கள் போராட்டம் : படகுகளை பாதுகாக்க இடம் கேட்டு கோரிக்கை…

25 November 2020, 6:13 pm
fisherman Protest - Updatenews360
Quick Share

விழுப்புரம் : நடுகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்த இடம் கேட்டி திடீரென கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் 80-க்கும் மேற்பட்டோர் படகுகளை வைத்து மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு இயற்கை சீற்றத்தின் போது இந்த மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக வைக்க இடமில்லை என்பது குற்றச்சாட்டு ஆகும். இயற்கை பேரிடர் காலத்தில் படகுகளை அருகில் உள்ள சுடுகாட்டில் தான் நிறுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தற்போது இந்த பகுதியில் இறப்பு நிகழ்ச்சி ஒன்று நடப்பதால் சுடுகாட்டில் படகுகளை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிவர் புயல் கடல் சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான இடத்தை கேட்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீனவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0