தொடரும் மீனவர்கள் கைது.. மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2022, 9:59 pm
Fisherman Strike - Updatenews360
Quick Share

ராமநாதபுரம் மாவட்டம் முற்றிலும் பிரதானமாக விளங்குவது மீன்பிடித்தல் தொழில், இதில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகில் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்,

இந்நிலையில், கடந்த 27-ம் தேதி மீன்பிடிக்க சென்று கட்சத்தீவிற்கும் நெடுந்திருக்கும் இடையே மீன் கொண்டிருந்த மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்து 7 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் நவம்பர் 9-ம் தேதி வரை சிறையில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டதை கண்டித்து வியாழக்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட விசைப்படகையும் 7 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இலங்கை அரசால் பரிந்துரை செய்யப்பட்ட படகுகளுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும், விடுபட்ட படகுகளுக்கும் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

2019 முதல் 2022 வரை பிடிபட்டு படகுகள் அனைத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் , தங்கச்சிமடம் வலசை தெருவில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

Views: - 464

0

0