ஆரணி ஆற்றில் மீன் பிடித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி : காணும் கொண்டாட்டத்தின் போது சோகம்!!

16 January 2021, 8:41 pm
Youth Dead - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு வந்த வாலிபர் ஆரணி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடலில் காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை மணலி சேக்காடு பகுதியிலிருந்து தச்சு தொழிலாளியான பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் சரவணன், கார்த்திக், குணசேகரன், இளங்கோ உள்ளிட்ட 6 பேரும் வந்திருந்தனர்.

அவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பியதால் அருகிலுள்ள ஆண்டார்மடம் பகுதியில் ஆரணி ஆற்றில் இறங்கி அனைவரும் மீன்பிடித்தனர். இதில் பாலாஜி ஆழமான பகுதியில் உள்ள சேற்றில் சிக்கி பரிதாபமாக நீரில் மூழ்கி மாயமானார்.

இதுகுறித்து உடன் வந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் திருப்பாலைவனம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவரது உடலை தேடி மீட்டனர். பின்னர் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ஆற்றில் இறங்கி மீன் பிடித்தபோது தவறி பள்ளத்தில் சிக்கி அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்காக வந்தவர் ஆரணி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0