கோவையில் 2ம் நிலை பெண் காவலர் பணிக்காக உடற்தகுதி தேர்வு: நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்ற தேர்வர்கள்..!!

Author: Aarthi Sivakumar
9 August 2021, 3:43 pm
Quick Share

கோவை: அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் இரண்டாம் நிலை பெண் காவலர் பணிக்காக நீளம் தாண்டுதல் தேர்வு நடைபெற்றது.

காவல், தீயணைப்பு மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள 11,813 இரண்டாம் நிலை காவலர் காண எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதை ஒட்டி எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் சென்ற வாரம் துவங்கியது.

இதேபோல் கோவை அவினாசி ரோட்டில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் பெண் காவலருக்கான உடற்தகுதி தேர்வு துவங்கியது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற தேர்வு நடைபெற்றது. இதில் முதலில் 1500 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது.

இதில் தேர்ச்சி பெற்றோருக்கு நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதையொட்டி கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் கோவை சரக டிஐஜி முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் மேற்பார்வையில் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

Views: - 515

0

0