குமரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை: திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்…கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

Author: Aarthi Sivakumar
27 September 2021, 7:13 pm
Quick Share

கன்னியாகுமரி: மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திற்பரப்புநீர் வீழ்ச்சியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் மலையோர பகுதிகளில் தொடர் கன மழை பய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், 48 அடி கொண்ட பேச்சி பாறை அணையில் நீர்மட்டம் 44 அடியை எட்டியதை அடுத்து 3000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து தடுப்புகளை தாண்டி கொட்டுகிறது.

திற்பரப்புநீர் வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 271

0

0