சுபமுகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி… அடுத்தடுத்த விசேஷ தினங்களால் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு : மல்லிகை பூ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
8 September 2021, 4:05 pm
flower market - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தொடர் முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்த விசேஷ தினங்களால் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பூக்கள் வந்து குவிகின்றன. அதேபோல், உள்ளூர் வெளியூர் வியாபாரிகளும் வந்து பூக்கள் கொள்முதல் செய்வது வழக்கம். மேலும் இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிக அளவில் பூக்கள் அனுப்பப்படுகிறது.

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலையானது பண்டிகை மற்றும் கோவில் திருவிழா சுப முகூர்த்த நாட்களில் விலை உயர்ந்தும் மற்ற நாட்களில் விலை குறைந்தும் காணப்படும். கடந்த வாரங்களில் பூக்களின் விலை குறைவாக இருந்தது. ஆனால் இன்று முதல் தொடர் சுப முகூர்த்தம் இருப்பதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அதன்படி, இன்று ஒரு கிலோ ரூ.200 விற்பனையான பிச்சிப்பூ இன்று ரூ. 850-க்கும், ரூ.350 விற்பனையான மல்லிகை பூ ரூ.1200 க்கும், சம்பங்கி பூ 500 ரூபாய்க்கும், ஸ்டெம் ரோஸ் ஒரு கட்டு ரூபாய் 550 க்கும், விற்பனையானது.

பூ மார்க்கெட்டில் மற்ற பூக்களின் ஒரு கிலோ இன்று அரளிப்பூ ரூ. 300 க்கும், முல்லைப் பூ ரூ. 500 க்கும், கனகாம்பரம் பூ ரூ. 1,000க்கும், வாடாமல்லி ரூ. 80, தாமரைப்பூ 100 எண்ணம் ரூ. 400 க்கும், கோழிப்பூ ரூ. 80 க்கும், துளசி ரூ. 30 க்கும், ரோஸ் பாக்கெட் ரூ. 30 க்கும், பட்டன் ரோஸ் ரூ. 650க்கும் , மஞ்சள் கிரேந்தி ரூ. 50, சிவப்பு கிரந்தி ரூ. 60 ,கொழுந்து ரூ. 70, மரிக்கொழுந்து ரூ. 80 என விற்பனையானது.

Views: - 431

0

0