தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்: நுரை ததும்ப பெருக்கெடுத்து ஓடும் தென்பெண்ணையாறு…!!

8 November 2020, 5:34 pm
river - updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் குவியல் குவியலாக நுரை தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு வரும் 560 கனஅடி நீர், அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில், தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை பயன்படுத்தி, ஏராளமான தொழிற்சாலைகள் கழிவுநீரை வெளியேற்றுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், ஆற்றுநீர் நுரைகள் பொங்க பாய்ந்தோடுகிறது.

இதனால், மதகு பகுதிகளில் குவியல் குவியலாக நுரைகள் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Views: - 27

0

0