“பொங்கி வரும் நுரை“ : 2வது நாளாக வைகை ஆற்றில் கலக்கும் ரசாயன கழிவுகள்!!

20 November 2020, 12:39 pm
vaigai - Updatenews360
Quick Share

மதுரை : வைகையாற்றில் 2 வது நாளாக மழை நீருடன் பொங்கி வரும் இரசாயன நூரை காற்றில் கலந்து வருகிறது.

வைகையாறு தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகி இராமநாதபுரம் மாவட்டம் வரை செல்கிறது, 257 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கும் வைகையாறு மதுரை நகருக்குள் பயணிக்கும் 8 கிலோ மீட்டர் தொலைவிற்க்கு கழிவு நீர் மற்றும் இரசாயன கழிவுகள் கலக்கிறது.

வைகையாற்று படுகையில் தற்போது தொடர் மழை காரணமாக மிதமான அளவு தண்ணீர் வருகிறது, மழை நீர் வருவதை பயன்படுத்தி இரவு நேரங்களில் இரசாயன கழிவுகள் ஆற்றில் விடப்படுகிறது.


இரசாயன நுரை அதிக அளவில் ஆற்றில் படர்ந்து காற்றில் கலந்து வருகிறது. இரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 0

0

0