கொரோனாவில் இருந்து மீண்டார் அமைச்சர் காமராஜ்: இன்று ‘டிஸ்சார்ஜ்’ என மருத்துவமனை தகவல்..!!
3 February 2021, 4:17 pmசென்னை: கொரேனாவில் இருந்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 5ம் தேதி கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதம் தொடர் சிகிச்சையில் இருந்த அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் காமராஜ் இன்று வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மூச்சுத்திணறல் அதிகம் காணப்பட்டதால் 20ம் தேதி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததால், எக்மோ சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழுவினர் முடிவு செய்தனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜ் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் காமராஜ் முழுமையாக கொரோனாவில் இருந்து மீண்டார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0
0