சுவை மாறிய டீ…. வாடிக்கையாளர்கள் புகார் : தேநீர் கடையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரெய்டு… சிக்கிய ஆதாரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2022, 5:00 pm
Tea Chemical - Updatenews360
Quick Share

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் இயங்கி வரும் ஆண்டவர் டீ ஸ்டால் என்கிற தேநீர் கடையில் விற்கப்படும் தேநீரின் சுவை மாறுவதாகவும் மேலும் கசப்பு தன்மையுடன் இருப்பதாகவும்,இந்த கடையில்  கலப்பட டீ தூள் பயன்படுத்துவதாகவும் திருவாரூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு வந்த புகார் வந்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் இந்த கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இந்த கடையில் பயன்படுத்தப்பட்ட டீத்துளின்  தரத்தை அறிந்து கொள்வதற்காக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குளிர்ந்த நீரில் டீத்தூளை போட்டு  பரிசோதித்தனர்.

இதில் நீரில் அதிக சாயம் இறங்கியது. மேலும் இந்த தேநீர் கடையில் நிறத்திற்காக இரண்டு வெவ்வேறு நிறுவனங்களின் டீத்தூளை கலந்து பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்தது. மேலும் தேனீர் கடை நடத்துவதற்கான உணவு பாதுகாப்புத்துறையின்  உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து அந்த தேநீர் கடையில் பயன்படுத்தப்பட்ட டீத்தூளின் மாதிரிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். உரிய சோதனை நடத்தப்பட்ட பின்பு கலப்பட தூள் பயன்படுத்தியது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 750

0

0