ஊருக்குள் புகுந்த பாகுபலி …விரட்டும் முயற்சியில் வனத்துறையினர்: மிரட்டிய காட்டுயானையால் பரபரப்பு..!!

Author: Rajesh
5 May 2022, 2:35 pm

கோவை: மேட்டுப்பாளையம் சமயபுரத்தில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி வனத்துறை யானையை விரட்ட முயன்ற போது பாகுபலி யானை வனத்துறையினரை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து பாகுபலி என பொதுமக்களால் அழைக்கப்படக்கூடிய காட்டுயானை பாகுபலி கடந்த 10 நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி ஊருக்குள்ளும் விளை நிலங்களுக்குள் புகுந்து வருகிறது.

குறிப்பாக சமயபுரம் நெல்லிதுறை குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை பாகுபலி நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை பாகுபலி சமயபுரம் ஊருக்குள் நுழைந்து அங்குள்ள கிராம சாலையின் நடுவே நடந்து சென்றது.

இதனை தகவலின்பேரில் அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுயானை பாகுபலியை விரட்ட முயன்றனர் அப்போது டார்ச்சு லைட்டுகளை வைத்து வனத்துறை ஊழியர்கள் பாகுபலியை விரட்ட முயன்ற போது காட்டுயானை பாகுபலி திடீரென வனத்துறையினரை நோக்கி பிளிறியபடி விரட்டி சென்றது இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அங்கிருந்து தள்ளிச் சென்றனர் இதுவரை காட்டுயானை பாகுபலி யாரையும் தாக்கியது இல்லை என்ற எண்ணம் இருந்து வந்த நிலையில் வனத்துறையினர் எங்கே காட்டு யானை தாக்கி முயற்சி செய்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனவே இந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

  • Sivrajkumar health update பிரபல கன்னட நடிகருக்கு புற்றுநோய் ..அடுத்தடுத்து காவு வாங்கும் டிசம்பர் மாதம்..சோகத்தில் ரசிகர்கள்..!
  • Views: - 972

    0

    0