தூரத்தில் காட்டுப்பன்றி…அருகில் சென்றால் குட்டியானை….வேட்டைக்காரனுக்கு கைவிலங்கு பூட்டிய வனத்துறை…!!

5 November 2020, 1:54 pm
hosur forest - updtaenews360
Quick Share

ஓசூர் அருகே வனப்பகுதியில் காட்டுப்பன்றி என கருதி குட்டியானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதிக்குட்பட்ட சென்னமாலம் பகுதியில் சுமார் 8 வயது மதிக்கத்தக்க பெண் குட்டியானை ஒன்று உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், பிரேத பரிசோதனையின் போது, யானையின் உடலில் குண்டு பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக, தளி வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சென்னமாலம் கிராமத்தை சேர்ந்த முத்துமல்லேஷ் என்பவர் யானையை சுட்டுக்கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த வனத்துறையினர் நாட்டுத்துப்பாக்கி ஒன்றினை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அடிக்கடி வேட்டைக்கு சென்று காட்டுப்பன்றிகளை வேட்டையாடி வந்ததும், இரவில் வேட்டைக்கு சென்றதால் காட்டுப்பன்றி என நினைத்து குட்டியானையை சுட்டுள்ளார். பின்னர் அருகில் சென்று பார்த்த போது காட்டுப்பன்றிக்கு பதில் குட்டியானை இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிவித்துள்ளார்.

Views: - 22

0

0