திமுகவில் திடீரென இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்…! அறிவாலயத்தில் பரபரப்பு

15 August 2020, 2:33 pm
Quick Share

சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வரக்கூடிய சட்டசபை தேர்தலில் அதிமுகவில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற விவாதம் ஆரம்பித்து உள்ளது. அமைச்சர்கள் ஒவ்வொரு கருத்துகளை முன் வைக்க, இந்த விவகாரம் இன்னும் வேகம் எடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கையும் வெளியிட்டு விட்டார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் பற்றி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

இப்படி அதிமுகவில் ஒரு பக்கம் காட்சிகள் அரங்கேற, சத்தமில்லாமல் அதிமுக முகாமில் இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சரான வி.எஸ்.விஜய், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து இருக்கிறார். அப்போது ஸ்டாலினுடன் துரைமுருகன், கேஎன் நேரு உள்ளிட்ட பலர் இருந்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் திடீரென திமுகவில் இணைந்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 54

0

0