அதிமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார் : அனைத்து கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி!!

30 November 2020, 1:16 pm
Admk Former MLA dead - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ உடல்நலக்குறைவு காரணமாக காலமானதையடுத்து அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தெற்கு அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் கடந்த 2001 முதல் 2005 ஆம் ஆண்டு வரை தாராபுரம் தொகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

2001ஆம் ஆண்டு பாமக சார்பில் தாராபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவகாமி 2003ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அன்றிலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி வின்சனுக்கு அதிமுகவில் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளராக பதவி வகித்தவர்.

அதிமுக அளவிலேயே தீவிர விசுவாசியாக இருந்து வந்தார். இந்நிலையில் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த சிவகாமி தனது வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்
இந்நிலையில் சிவகாமி தன் வீட்டில் இருந்த போது நேற்று இரவு உயிரிழந்தார். இவரின் இறுதி சடங்குகள் இன்று நடக்கிறது மறைந்த சிவகாமி வின்சன் இரண்டு மகளும் மூன்று மகன்களும் உள்ளனர். அவருடை பல்வேறு கட்சியினர் உட்பட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Views: - 0

0

0