பாலியல் வழக்கில் ஆஜராகாத தமிழக முன்னாள் டிஜிபி : முக்கிய மனுவை ஏற்ற நீதிமன்றம் அளித்த பரபரப்பு உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2022, 3:56 pm
Villupuram Former DGP Case -Updatenews360
Quick Share

விழுப்புரம் : தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீதான பாலியல் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் பெண் எஸ்பி மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன், நேரில் ஆஜரான நிலையில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் இன்று ஆஜராகவில்லை.
டிஜிபி தரப்பு குறுக்கு விசாரணை நடத்த கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோபிநாதன் வரும் 15 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

Views: - 507

0

0