திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்!!
25 August 2020, 1:10 pmதிருநெல்வேலி : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நைனா முகம்மது மாரடைப்பால் காலமானார்.
1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி போட்டியிட்டு வெற்றி பெற்ற நைனா முகமது. பின்னர் 2001ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
சுமார் 17 வருடம் அதிமுகவின் சிறுபான்மை பிரிவு மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் பெறுப்புகளை வகித்து வந்தார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சிஏஏ, என்.ஆர்.சி போன்ற திட்டங்களுக்கு அதிமுக வாக்களித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவில் இருந்து நைனா முகமது வெளியேறினார். அதன்பின் வீட்டில் ஓய்வெடுத்த நைனா முகமது இன்று அதிகாலை மாரடைப்பால் அவதிப்பட்டார். உடனே தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் நெல்லை தனியார் மருத்துவமனையில் அழைத்துச் செல்லும் போது மரணமடைந்தார்.