மகுடம் மற்றும் வேலுடன் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி : கோவையில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு!!

27 August 2020, 2:21 pm
Cbe BJP Invites IPS - Updatenews360
Quick Share

கோவை : கோவைக்கு வந்த பா.ஜ.க.,வில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு பா.ஜ.க சார்பில் மேளதாளாம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ் பதவியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவர் பா.ஜ.க., தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அண்ணாமலை பா.ஜ.க.,வில் இணைந்தார்.

அக்கட்சியில் இணைந்த பின்னர் தமிழகத்தில் முதல் முறையாக அவர் கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்திற்கு இன்று வந்தார். அவருக்கு கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் மேளதாலம் முழங்க, பட்டாசுக்கள் வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு மலர் மகுடம் சூட்டி, வேல் ஒன்றை அளித்தனர். இதனை தொடர்ந்து கூட்டத்தினரிடையே அவர் பேசுகையில், தொண்டானுக்கும் தலைவனுக்கும் இக்கட்சியில் பெரிய வித்யாசம் இல்லை. இங்குள்ள ஒவ்வொரு தொண்டனும் பல போராட்டங்களை சந்தித்துள்ளனர்.

ஒன்றுமில்லாத போதும் தமிழகத்தில் இக்கட்சியை வளர்த்தியிள்ளனர். தமிழகம் புன்னிய பூமி. வழிபாட்டு முறையோடு இருந்த தமிழகம், கடந்த 52 ஆண்டுகளாக கடவுள் இல்லை என்று கூறிய கூட்டத்தால் மாற்றுப்பாதையில் சென்றது.

இது ஒரு புன்னிய பூமி. இதனை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது முதல் வேலை. திராவிட கட்சிகளிடம் மீடியா இருபதால் மக்கள் மனதில் பிம்பத்தை விதைத்துள்ளனர். பல மாநிலங்களில் பா.ஜ.க இல்லை என்று சொன்ன நிலையில் இன்று பா.ஜ.க பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

அதேபோல் தமிழகத்திலும் ஆட்சி வரும். கட்சியில் சேர்ந்து 3 நாள் தான் ஆகிறது எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தீர்கள் மாற்றத்தை உருவாக்கி காட்டுவோம். இது புது ரத்தம். புது வெள்ளம் இது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 36

0

0